赛派号

苹果手机非官方渠道为什么便宜 முருகன் பக்தி பாடல்கள் வரிகள்

Advertisement முருகன் பக்தி பாடல்கள் வரிகள் 

பொதுவாக விநாயகர் என்ற சொன்னவுடன் மறுபுறம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது முருகன் மட்டுமே. ஏனென்றால் விநாயகரும், முருகப் பெருமானும் அண்ணன் தம்பி ஆவார்கள். அந்த வகையில் முருகனுக்கு சுப்ரமணியன், சரவணன், மணிகண்டன், ஆறுமுகன், வேலன், சண்முகன் என பல வகையான பெயர்கள் இருக்கிறது. இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை கூறி அழைக்கும் முருகனுக்கு மொத்தமாக 6 வீடுகள் உள்ளது. அதாவது பழனி, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் மற்றும் சுவாமி மலை என அறுபடை வீடுகள் இருக்கிறது.

அந்த வகையில் இவ்வாறு எல்லாம் பல சிறப்புகளை கொண்டுள்ள முருகனுக்கு உகந்த நாளாக கார்த்திகை நாளானது இருக்கிறது. இவ்வாறு மாதந்தோறும் வரும் கார்த்திகை மட்டும் இல்லாமல் இதர நாட்களிலும் முருகனை வழிபடும் போதும் நாம் அவருக்கான பாடல்களை பாடி வழிபடுவது மிகவும் நல்லது. ஆகவே இன்று முருகனுக்கு உரிய பக்தி பாடல்களில் ஒன்றான அழகு என்ற சொல்லுக்கு முருகா பாடலை வரிகளை படிக்கலாம் வாங்க..!

அழகு என்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள்:

alagu endra sollukku muruga lyrics in tamil

முருகா..! முருகா..!

அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா..!

சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா

கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா…

ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா

பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

அரகரா சண்முகா முருகா அரகரா சண்முகா முருகா என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

முருகா முருகா முருகா..!!

நீ அழைத்தால் நான் வருவேன் பழனி ஆண்டவா:

நீ அழைத்தால் நான் வருவேன் பழனி ஆண்டவா உனது அருள் கிடைத்தால் நலம் பெறுவேன் பழனி ஆண்டவா

சரணகோஷம் மலையைச் சுற்றி எதிர் ஒலிக்குதே உனை காண வரும் பக்தர் கூட்டம் மனம் இனிக்குதே நடந்து வந்த பாதையெல்லாம் கஷ்டம் நிறைந்தது கந்தா உன்னை கண்டவுடன் காற்றில் பறந்தது (நீ அழைத்தால்……..)

சாலை வழி கூறிவரும் சரண கோஷங்கள் வேலன் உந்தன் செவிகளுக்கு விருந்து படைத்திடும் காலையிலும் மாலையிலும் கவிகள் பாடியே நாளை எனும் நாள் கடந்து நானும் வருகிறேன் (நீ அழைத்தால்……..)

தங்கரதம் மீதமர்ந்து தரணி ஆள்பவா தங்கமனக் கோவில் உண்டு தங்க ஓடிவா இங்கும் அங்கும் பக்தர்களின் புகழில் சிறந்தவா பொன்பழனி ஆண்டவனே பொறுத்து காத்துவா (நீ அழைத்தால்……..)

காவடிகள் ஆட்டத்திலே கனிந்து மகிழ்பவா சேவடியே சரணமென நினைத்து வாழ்கிறோம் பாலகனும் கால் நடையாய் நடந்து வருகிறோம் பொன்பழனி ஆண்டவனே காத்து அருளவா (நீ அழைத்தால்……..)

வழிநெடுக உந்தன் நாமம் உச்சரிக்கையில் விழி இரண்டும் கண்ணீரில் தத்தளிக்கையில் அருள் காட்சி தரவேண்டும் உன்னை அழைக்கையில் அரோகரா என்று சொல்ல சக்தி பிறக்குது (நீ அழைத்தால்……..)

ஆறுபடை வீட்டினிலே அமர்ந்த மன்னவா ஆனைமுகன் தம்பியாக அவதரித்தவா ஆறுதலை பன்னிருகை அய்யா வேலவா ஆறுதலை கந்தனுக்கு அருளை காட்டவா (நீ அழைத்தால்……..)

அழகான பழனிமலை ஆண்டவா:

அழகான பழனிமலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா

வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே வரவேண்டும் மயில்மீது முருகையனே

முருகா முருகா முருகா முருகா

அழகான பழனிமலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா

வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே

என்னை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா எளியேனும் உன்னை பாட அருள்வாய் ஐயா

முருகா முருகா முருகா முருகா

அழகான பழனிமலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா

நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய் தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய்

உன்னையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா உலகாளும் ஆண்டவனே நீதான் ஐயா

அழகான பழனிமலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா

வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே வள்ளிமயில் நாதனே வா வடிவேலனே வரவேண்டும் மயில்மீது முருகையனே

முருகா முருகா முருகா முருகா

வீரவேல் வெற்றிவேல் வேல் வேல்:

சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலெடுத்து தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் – அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச் சாற்றுவது ஆறெழுத்து மந்திரம் – (வேல் வேல்)

ஆறெழுத்து மந்திரத்தைத் தந்ததொரு சுந்தரத்தை அதிபர் சிந்தனைசெய் நெஞ்சமே – அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும் ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே – (வேல் வேல்)

கந்தனடியே நினைந்து சங்கத்தமிழ் மாலைகொண்டு வந்தனை செய்வோர்கள் மனம் யாருமே – பரங் குன்றுவளர் குகனோடு தாங்கிவரவே நமக்குள் பொங்கிவரும் செல்வம் பதினாருமே – (வேல் வேல்)

சரவனையிலே பிறந்த ஆறுமுக வடிவேலா:

சரவனையி லேபிறந் தாறுமுக வடிவான சண்முகா வருக வருக தர்க்கமிடு சூரனை திக்கவேல் விட்டதொரு சுவாமியே வருக வருக அரவணையில் மால்மருக குமரகுரு பரனெங்கள் ஆறுமுகா ஓடிவருக அலைகடலின் மகரமீன் ஓடி விளையாடிய அமரர்பதி வருக வருக கருவனையில் நற்ச்சதுரவேல் நின்று நடனமிடும் கணபதி துணைவன் வருக கடியை எண்ணாயிரம் சமணரை வதைத்திடும் கந்தனே ஓடி வருக மருவணையில் பொண்ணாட உலகமது காக்கின்ற வடிவேல் இலங்கு கரமும் வாலவய தாயினது வாழ்மயில் எறிநட மாடிவரு முருகேசனே

வருவண்டி தருவாண்டி மலையாண்டி :

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி

அவன் ஆண்டி பழனியாண்டி

சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி

அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி

என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி

அவன் தான் -பாலாபிஷகங்கள் கேட்டாண்டி-சுவை

பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

கந்தா என்றால் இங்கு வந்தேன் என்று சொல்லி

சீத்தர்கள் சீடர்கள் பலகோடி

அவன்  செல்வாக்கு எவற்கேனும் வருமோடி

முருகனின் செல்வாக்கு எவற்கேனும் வருமோடி

பக்தர்கள் தினம்தோறும் பலர் கூடி

திருப்புகழ் பாடி வருவார்கள் பலக்கோடி

பழனிமலையாண்டி பழனிமலையாண்டி பழனிமலையாண்டி

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள் Advertisement

版权声明:本文内容由互联网用户自发贡献,该文观点仅代表作者本人。本站仅提供信息存储空间服务,不拥有所有权,不承担相关法律责任。如发现本站有涉嫌抄袭侵权/违法违规的内容, 请发送邮件至lsinopec@gmail.com举报,一经查实,本站将立刻删除。

上一篇 没有了

下一篇没有了