ஆண்டின் 365 நாட்களுக்குமான தினசரி பலன், மாத பலன், ராசி பலன், அனைத்து ராசிக்குமான கிரக பெயர்ச்சி பலன்கள், இன்று ஒரு தகவல்கள் போன்றவைகளை அறிந்து கொள்ளலாம். இத்துடன், இராகு காலம், எமகண்டம், குளிகை, வாஸ்து தினம், சுப முகூர்த்த நாட்கள் மற்றும் ஜாதக குறிப்பு, திருமண பொருத்தம் போன்றவைகள் வழங்கப்படுகிறது.
மாதந்தோறும் வருகிற திதிகளான அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி மற்றும் முழு முதற்கடவுளான விநாயகருக்குரிய சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, தமிழ் கடவுளான முருக பெருமானுக்குரிய சஷ்டி, கிருத்திகை, சிவ பெருமானுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி, பெருமாளுக்குரிய ஏகாதசி போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை நாட்களின் பட்டியல்கள் (இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள்) குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பிரபலமான கோயில்களின் முழு விபரங்கள், ஆன்மிகம், ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து குறிப்புக்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த சிறப்பு தகவல்களும் இத்துடன் சொற்பொழிகளும் இடம் பெற்றுள்ளது.